சட்டமன்ற முற்றுகை போராட்டம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » சட்டமன்ற முற்றுகை போராட்டம்

சட்டமன்ற முற்றுகை போராட்டம்


சட்டமன்ற முற்றுகை போராட்டம் இன்ஷாஅல்லாஹ்...


தஞ்சை மாவட்ட வடக்கு ஆவணியாபுரம், ஆடுதுரை கிளையில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரம்.




தஞ்சை மாவட்ட வடக்கு நாச்சியார்கோவில், திருநரையுர் TNTJ கிளை சகோதரர்கள் வைத்துள்ள விளம்பர பலகை




உங்கள் பகுதியில் விளம்பரம் செய்துவிட்டீர்களா?

Share this article :

2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

    உங்களது சமுதாய அக்கரை அனைவருக்கும் வரவேண்டும் என்பதே எமது ஆவல். ஆனால் ஒரு விஷயம்... உங்களது தலைவரும் உங்கள் தலைமையும் மடத்தனமாக - அவசரத்தனமாக - தவறான ஒரு முடிவை அறிவித்தாலும் அதற்கும் நீங்கள் ஒத்து ஊதுவது என்பது நீங்கள் உங்களையே அழித்துக்கொள்வதற்கு சமமாகும். முஃமீன்கள் அல்லாஹ்வுடைய வசனத்தின் மீது கூட குறுட்டுத்தனமாக விழுந்துவிடமாட்டார்கள் என்று தனது திருமறையில் அல்லாஹ் கூறுகின்றான். (அல் குர்ஆன் 25:73). அல்லாஹ்வுடைய வசனமாக இருந்தாலும் அதையும் அவர்கள் தெளிவான ஞானத்தோடு அதைபின்பற்றுவார்கள் என்று கூறுகின்றான். ஆனால் நீங்களும் உங்கள் இயக்கத்தவர்களும் பீஜே எதைச்சொன்னாலும் அதுதான் சரி என்று குறுட்டுத்தனமாக - அவர் சொல்லியது சரியோ தவறோ - அதில் நியாயம் இருக்கின்றதோ இல்லையோ - என்தலைவன் சொல்லிவிட்டான் என்று மடத்தனமாக போய் விழுகிறீர்களே என்றென்னும்போது கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. அந்தவிதத்தில் தான் உங்கள்தரப்பார் கொடுத்துள்ள சுவர் விளம்பரம்.

    விஷயத்திற்கு வருவோம். நான் எடுத்துவைக்கும் நியாயத்தை தயவு கூர்ந்து நீங்களும் உங்கள் கூட்டத்தாரும் சிந்திக்க வேண்டும். அல்லது பதில் சொல்ல வேண்டும்.

    முதலில், முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்தது செப்டம்பர் 15 2007, அதுவும் முஸ்லீம்களுக்கொண்ற தனி இடஒதுக்கீடு அல்ல. முன்பே பிற்படுத்தப்பட்டோர் அனுபவித்து வரும் 30 சதவிகித இடஒதுக்கீட்டிலிருந்து நம்மையும் சேர்த்து உள்ஒதுக்கீடு அளித்துள்ளனர். ஆதாவது முன்பே அனுபவித்துவந்தவர்களோடு நம்மையும் கிறிஸ்தவர்களையும் செப்டம்பர் 15 அன்று சேர்கின்றனர். இன்று நமக்கு இடஒதுக்கீட்டில் உள்ள சட்டம் என்பது நமக்கொண்றே போடப்பட்ட சட்டம் என்று எதுவும் கிடையாது. முன்பு உள்ளவர்களுக்கு என்ன சட்டம் உள்ளதோ அதே தான் நமக்கும் என்பதையும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். இங்கே 'ரோஸ்டர்' என்ற ஒரு முறையில் சில பிரச்சனை வருகின்றது. இந்த பிரச்சனை வந்ததும் உங்கள் தலைமையினரும் பார்க்கின்றார்கள். மற்ற இயக்கத்தினரும் பார்க்கின்றார்கள். அதில் மற்ற இயக்கத்தினர் ஏதும் நமக்கு முன்னமே போராட்டம் ஏதும் செய்துவிடுவார்கள் என்று என்னினாரோ என்னவோ தெரியவில்லை எடுத்தேன் கவிழ்தேன் என்று அறிக்கை அதைதொடர்ந்து போராட்டம்.

    நான் கேட்கிறோன் 'எடுத்தவுடன் கருனாநிதி முஸ்லீம்களுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று கூறினாரே அப்படியானால் முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீடு கொடுத்த நாளான செப்டடம்பர் 15 அன்றுதான் ரோஸ்டர் என்ற முறை அமல்படுத்தப்பட்டதா? முன்பே பிற்படுத்தப்பட்டவர்கள் அந்த முறையின் படி வேலைக்கொடுக்கப்பட்டு வருகிறார்களா? இல்லையா? முஸ்லீம்களுக்கு பிற்படுத்தப்பட்டோரிலிருந்து உள்ஒதுக்கீடு கொடுத்தது தவிர கருனாநிதி வேறு ஏதாவது சட்டம் பிறத்தியோகமாக அறிவித்தாரா? இதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

    முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் உள்ஒதுக்கீடு கொடுத்ததே தவறு என்று அதிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள ஒதுக்கீட்டிலிருந்து பிரித்து அளித்தது தவறு என்றும் பலரும் இதனால் சமுதாயத்திற்குள் பல பிரச்சனைகள் வரும் என்று பலரும் கேர்ட்டை அனுகி தடைஉத்தரவு வாங்குவதற்காக நாடியிருக்கும் வேலையில் 'உங்கள் தலைவரும் உங்கள் இயக்கத்தவர்களும் டிவிக்களில் பேசும் போதும் மேடைகளில் பேசும்போதும் ஆர்ப்பாட்ட போஸ்டர்களிலும் 'போராடிபெற்ற முஸ்லீம்களுக்கு 1.5 சதவிகிதமும் போராடாமல் சும்மா இருந்த கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவிகிதமும் கொடுத்து முஸ்லீம்களை ஏமாற்றும் துரோகி கருனாநிதியே' என்று சொன்னால் இந்த வாசமும் இந்த பேச்சுமே இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களுக்கும் காவிக்கும்பலுக்கும் சாதகமாகிவிடாதா?

    கேரளாவில் முஸ்லீம்களுக்கு இருக்கக்கூடிய இடஒதுக்கீட்டிலும் தானே இந்த ரோஸ்டர் முறைப்படி இடங்கள் நிரப்பப்படுகின்றது. அங்கே எந்த முதல்வரும் எந்தக் கட்சியாவது முஸ்லீம்களுக்கு துரொகம் இழைத்துவிட்டார்கள் என்றா சொன்னார்கள் உங்கள் தலைவர்கள்? மாறாக அந்த முறையை வைத்து இங்கேயும் இடஒதுக்கீடு கொடுங்கள் என்றுத் தான் கோரிக்கை வைத்தீர்கள்.

    சென்ற முறை ஜெயலலிதா 5 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சிபுரிந்தார்;. ஆட்சிக்கு வரும் முன் தேர்தல் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பேன் என்று வாக்குறுதி அளித்தவர் தனது 5 ஆன்டுகால ஆட்சியில் அதைசெய்யாதது மட்டுமின்றி 'முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தால் மீண்டும் ஒரு பிரிவினைக்கு வழிவகுக்கும் அப்படி நான் கொடுக்கவே மாட்டேன்' என்று பேட்டியளித்து தான் ஒரு சங்பரிவாரி என்பதை நிரூபித்தார். தனது ஆட்சிக்காலத்தில் அதற்கு சாத்தியமே இல்லை என்று சொன்னவர் பொதுத்தேர்தல் அறிவிப்பு வந்தப்பிறகு அவரது ஆட்சி ஒரு காபந்து அரசாக மாறிய பிறகு ஒரு கமிஷனை அமைத்தார் என்று கூக்குரல் இட்டவர்கள் - இடஒதுக்கீடு அல்ல ஒரு கமிஷன் அதுவும் 2 ஆண்டுகள் கழித்து இடஓதுக்கீடு கொடுக்கலாம் அல்லது கொடுக்காமலும் இருக்காலம் - அது வரை காத்திருப்போம் என்றும் இவருக்குத்தான் ஓட்டுப் போடவேண்டும் என்றும் கருனாநிதி கொடுக்கவே மாட்டார் என்று பிரச்சாரம் செய்த நீங்கள் - இந்த கருனானிதி ஆட்சியில் இடஒதுக்கிடும் வந்துவிட்டது – அரசு சொல்வது போல் ரோஸ்டர் முறைப்படு உன்மையிலேயே நடைமுறைப்படுத்துகிறார்களால் இல்லையா என்று ஒரு வருடமாவது காத்திருந்து விட்டு பிறகு கருனாநிதி துரோகம் செய்து விட்டார் என்று அறிவித்திருந்தால் நியாயம். தர்மம். இல்லையா? ஏன் இந்த அவசரம்? ஜெயலலிதாவுக்கு எப்போதும் விசுவாசமாகத்தான் இருக்கின்றோம் என்று காட்டிக்கொள்ளவா?


    நாம் இவ்வளவு காலமும் இடஒதுக்கீடுக்கிற்காகத்தான் போராடினோமே யொழிய நமக்கு அதில் உள்ள சட்டப்பிரச்சனைகள் தெரிய வாய்ப்பில்லை. உடனே என்ன செய்திருக்க வேண்டும். கலைஞர் இடஓதுக்கீடு கொடுத்ததும் எல்லோரும் சந்திக்கிறார்கள் நாம் சந்திக்காமல் விட்டால் பலரும் கேள்விக்கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்று பயந்தவர்கள் உடனே போய் 'நாங்கள் என்ன போராட்டம் நடத்தினாலும் வரும் நாடாலுமன்றத்தேர்தலில் உங்களுக்குத்தான் ஓட்டு என்பதில் எந்த மாற்றமும் இல்லை' என்று அடிமைசாசனம் எழுதிக்கொடுத்தவர்கள் அதே போல் முதல்வரையோ அல்லது அதிகாரிகளையோசந்தித்து அவர்கள் கொடுக்கும் விளக்கங்களில் உள்ள உன்மையா இல்லையா? என்று ஒரு வருடமோ அல்லது அரைவருடமோ காத்திருந்து அவர் ஏமாற்றி இருந்தால் போராட்டமும் ஆர்பாட்டமும் நடத்தி இருந்தால் மக்கள் உங்களை ஆதரிப்பார்கள். இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கும் முற்றுகை போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவிப்பது மடத்தனம் இல்லையா? இதை பார்த்து மற்றவர்களும் சட்டம் தெரிந்தவர்களும் சிரிப்பார்கள் இல்லையா? ஆட்சியாளர்களோ 'இவர்கள் என்னடா மடையர்களாக இருக்கின்றார்கள். கொடுத்தாலும் தவறு கொடுக்காவிட்டாலும் தவறா?, இவர்களுக்கு கொடுக்காமலேயே இருந்து விடலாம் என்று என்னிவிட மாட்டார்களா?. சிந்தியுங்கள். ததஜ சகோதரர்களே.

    - அதிரை அப்துல்லாஹ்

    abdullah_maa@yahoo.co.in

    ReplyDelete
  2. Arumayaana Karuthu abdullah avargalley. vunmayil sinthikka vendiya vondru yanbathil maattrukaruthu kidayaathu

    ReplyDelete

உங்களது கருத்துக்களை பதியவும்...


மாவட்ட நிர்வாகிகள்



தலைவர்:

H.ஜாபர் அலி : 87547 07666


செயலாளர்:

J.முஹம்மது பாரூக் : 99658 52468


பொருளாளர்:

M.சாகுல் : 9944 33 8848


து.தலைவர்:

S.சிக்கந்தர் அலி : 93843 57357


து.செயலாளர்கள்:

சாதிக் பாட்சா 9159959911

மகாதீர் முஹம்மது : 9894 22 0097

A. அப்துல் ரஹ்மான் : 9944 33 8847

அய்யூப் கான் : 80564 62689

பரக்கதுல்லாஹ் : 95003 09529


மருத்துவரணி செயலாளர்:

வரிசை முஹம்மது : 98945 77133


மாணவரணி செயலாளர்:

நஸ்ருதீன் : 98419 34683


வர்த்தகரணி செயலாளர்:

கபீர் அஹமது : 99947 66962

பதிவுகளின் தொகுப்பு

பிரபலமானவை