அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அப்பாவி மீது கொலைவழக்கா?
TNTJ ஆர்பாட்டம்
13-02-08 புதன் கிழமை 4.00 மணிக்கு திருவிடைமருதூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு,
தஞ்சை மாவட்டம் வடக்கு ஆவணியாபுரம் ஆடுதுரை முருகேசன் கொலை வழக்கில், தொடர்பில்லாத இரு அப்பாவி முஸ்லிம் சகோதரர்களை கைது செய்து, அடித்து சித்ரவதை செய்து, பொய் வழக்கு பதிவு செய்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் (DSP) ரொசாரியா மற்றும் காவல்துறை ஆய்வாளர் (Inspector) பழனிச்சாமி ஆகியோரை கண்டித்தும், பணிநீக்கம் செய்யக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கண்டறிய CBCID -க்கு இந்த வழக்கை மாற்றக்கோரியும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடந்தது, அல்ஹம்துலில்லாஹ்.
இதில் சகோ: A.சாஜஹான் (TNTJ மாவட்ட தலைவர்) அவர்கள் தலைமை தாங்கியும், சகோ: P;ஜெய்னுல்ஆபிதீன் (TNTJ மாநில தலைவர்) அவர்கள் மற்றும் சகோ: A.ஜாபர்அலி (மாவட்ட துணைதலைவர்) அவர்களும் கண்டன உரை ஆற்றினார்கள், இறுதியில் சகோ: இமாம் அலி (கிளை தலைவர்) நன்றியுரை ஆற்றினார்கள். இதில் 4000 –த்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துக்கொண்டனர்.
குறிப்பு: ரொசாரியா (DSP), பழனிச்சாமி (Inspector) இவர்களின் சட்டத்திற்கு புறம்பான மேலும் விபரங்களுக்கு கை பிரதியை பார்க்கவும்.
PJ அவர்களின் ஆவெச உரையின் வீடியோ காட்சி விரைவில் வீடியோ பகுதியில் பார்க்கவும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !