அல்லாஹ்வின் திருப்பெயரால்…
• அபுதாபியில் TNTJ தஞ்சை வடக்கு கிளை
• எழுச்சி மாநாடு ஏன்?
துபையில் கடந்த 15.02.2008 அன்று TNTJ தஞ்சை வடக்கு மாவட்ட ஒருகிணைப்புக்குழு மற்றும் மாதாந்திர செயற்குழு துபை JT தலைவர் சகோ. ஐமாலுத்தீன் தலைமையில் நடைபெற்றது, சிறப்பு அழைப்பாளராக தாயகத்திலிருந்து வருகைத் தந்துள்ள TNTJ மாநில பொதுச்செயலாளர் சகோ. S.M பாக்கர் அவர்கள் ‘தவ்ஹீத் எழுச்சி மாநாடு ஏன்?’ என்ற தலைப்பிலும், மற்றும் மாநில செயலளர் சகோ. கோவை ஐஃபர் அவர்கள் ‘TNTJ கடந்து வந்த பாதை’ என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். நிகழ்ச்சியில் கீழ்க்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. இன்ஷாஅல்லாஹ் வருகின்ற மே 10, 11 தஞ்சை வல்லத்தில் நடைபெற இருக்கின்ற மாநாட்டிற்கு அனைவரும் அனைத்து விதத்திலும் ஒத்துழைப்பு தருவது என தீர்மானிக்கப்பட்டது.
2. இன்ஷாஅல்லாஹ் கூடிய விரைவில் அபுதாபியில் TNTJ தஞ்சை வடக்கு மாவட்ட கிளை அமைப்பதற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3. தஞ்சை வடக்கு மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர நோட்டீஸ் தொடந்து வினியோகம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது. மேலும் இன்னும் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !