Latest Post
Showing posts with label கோடைக்கால பயிற்சி. Show all posts
Showing posts with label கோடைக்கால பயிற்சி. Show all posts
கோடைக்கால பயிற்சி - குறிச்சிமலை திருமங்கலக்குடி கிளை
தஞ்சை வடக்கு குறிச்சிமலை திருமங்கலக்குடி கிளை சார்பாக 18.5.2016 அன்று கோடைக்கால இஸ்லாமிய பயிற்சி பரிசளிப்பு நிகழ்ச்சி தவ்ஹீத் பள்ளியில் அல்லாஹ்விடைய மாபெரும் கிருபையால் முகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறுவர் மற்றும் சிறுமியர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு துஆ,சூரா,கேள்வி பதில்,உரையாடல்,பயான் போன்றவைகளை மிகச் சிறந்த முறையில் பாராட்டும் வகையில் கூறினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
மாவட்ட பேச்சாளர்கள் சகோ.ஜெக்கரியா தொழுகையின் அவசியம் என்ற தலைப்பிலும்,சகோ.சையத் பாஜி முஹம்மது ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பிலும்,சகோ. இமாம் அலி அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். இறுதியில் கலந்துகொண்ட சிறுவர் மற்றும் சிறுமியர்கள் அனைவருக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
கோடைகால பயிற்சி முகாம் - மேலக்காவேரி கிளை
தஞ்சை வடக்கு - மேலக்காவேரி கிளை சார்பாக 13-05-2016 அன்று மாலை மக்ரிப் தொழுகை பிறகு மேலக்காவேரி மர்கஸில் கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர்
1. முகம்மது ஜாவித் - தவ்ஹீத் ஜமாதின் செயல்பாடுகள் என்ற தலைப்பிலும் ,
2. முஜாஹித் - கோடைகால பயிற்சி முகாம் தந்த படிப்பினை என்ற தலைப்பிலும்
3. அபி முகம்மது - மனித வாழ்வை சீரழிக்கும் உணவு முறைகள் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.
இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர்
1. முகம்மது ஜாவித் - தவ்ஹீத் ஜமாதின் செயல்பாடுகள் என்ற தலைப்பிலும் ,
2. முஜாஹித் - கோடைகால பயிற்சி முகாம் தந்த படிப்பினை என்ற தலைப்பிலும்
3. அபி முகம்மது - மனித வாழ்வை சீரழிக்கும் உணவு முறைகள் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.
இதற்கு பிறகு கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாணவ - மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிகமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
100 நபர்களுக்கு கோடைக்கால பயிற்சி வகுப்பு - சோழபுரம் கிளை
தஞ்சை வடக்கு சோழபுரம் கிளையில் நடைபெற்ற கோடைக்கால பயிற்சி வகுப்பு
தேதி : 02 முதல் 11 வரை
ஆசிரியர் : சோழபுரம் இமாம் முஹம்மது ரபிக். மாணவர்கள் 30 பேர் கலந்துக்கொண்டனர்.
பாடம்: வாழும் தலைமுறையினரின் வாழ்வியல் வழிகாட்டி இஸ்லாமியக்கல்வி 2
தேதி : 02 முதல் 11 வரை
ஆசிரியர்கள் : ஷர்மிளா பானு, நஸிமா நிஹாரா , ஷர்மிளா பானு ,
பெண்கள் மற்றும் மாணவிகள் 70 பேர்கலந்துக்கொண்டனர்.
*கோடைக்கால இஸ்லாமிய நல்லொழுக்க பயிற்சி வகுப்பு* - குறிச்சிமலை திருமங்கலக்குடி கிளை
தஞ்சை வடக்கு குறிச்சிமலை திருமங்கலக்குடி கிளை சார்பாக மே 2 முதல் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான கோடைக்கால இஸ்லாமிய நல்லொழுக்க பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இதில் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான தனி வகுப்புகளாக 2 பிரிவுகளில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.மொத்தம் 70 பிள்ளைகள் இவ்வகுப்பில் சேர்ந்து பயன்பெற்றுவருகின்றனர்.



















