பண்டாரவாடை பொதுக்கூட்டம்- தீர்மானங்கள், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , » பண்டாரவாடை பொதுக்கூட்டம்- தீர்மானங்கள், செய்திகள் மற்றும் புகைப்படங்கள்

பண்டாரவாடை பொதுக்கூட்டம்- தீர்மானங்கள், செய்திகள் மற்றும் புகைப்படங்கள்


தஞ்சை வடக்கு பண்டாரவாடை கிளை, 02.10.2015
உரை: அல்தாஃபி
சாபத்திற்குறிய சமாதி வழிபாடு
உரை: சையது சுலதான்
மாநபி வழியா?  மத்ஹப் வழியா?
இடம்:பெரிய தெரு, பண்டாரவாடை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத பண்டாரவாடை கிளை
02.10.2015 பொதுக்கூட்டத்தின் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்

1. புளூ கிராஸ்:

முஸ்லிம்கள் குர்பானி கொடுக்கும் ஹஜ் பெருநாள் காலங்களில்  மட்டும் தொடர்ந்து பிரச்சனை செய்து வரும்  புளூ கிராஸ் அமைப்பை இப்பொதுக்கூட்டம் கண்டிக்கிறது.  

2. மாட்டிறைச்சி விவகாரம்:

உத்திரபிரதேச மாநில தாத்ரி பகுதியில் முஹம்மது அஹ்லாக் என்ற 5௦ வயது மிக்க ராணுவ வீரரின் தந்தையை, மாட்டிறைச்சியை சாப்பிட்டதாக வந்த வதந்தியை தொடர்ந்து அவரை அடித்து நொறுக்கி கொலையுண்ட சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது. இந்த காட்டுமிராண்டித்தனத்தையும், இந்துத்துவ போக்கை இப்பொதுக்கூட்டம் வன்மையாக கண்டிகிறது.

3. அநீதி மன்றங்கள்:

      1993ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பில் சந்தேகத்தின் அடிப்படையில், விசாரணைக்கு தானே முன்வந்து ஆஜரான யாகூப் மேமனை தூக்கிலிட்டது அநீதியாகும். மேலும் தூக்குத் தண்டனை கைதிகள் பலர் பட்டியலில் இருக்கும் போது அப்சல் குருவையும், யாகூப் மேமனையும் மட்டும் அவசர அவசரமாக தூக்கிலிடப்பட்டு முஸ்லிம் விரோத போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை இப்பொதுக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

4. இட ஒதுக்கீடு;

முஸ்லிம்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5௦ ஆண்டுகளுக்கு முன்பு உள்ள தலித்துகளை விட அகலபாதாளத்தில் உள்ளதாக நீதிபதி சச்சார் மற்றும்  ரங்கநாத் மிஸ்ரா ஆகிய கமிஷன்கள் தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆட்சிக்கு வரும் முன் முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக வாக்குறுதியளித்த தமிழக முதல்வர் இந்நாள் வரை இடஒதுக்கீட்டை  உயர்த்திதத்தரவில்லை. ஆகவே உடனடியாக முஸ்லிம்களின் 3.5 % இடஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்தி தர இப்பொதுக்கூட்டம் வலியுறுத்துகிறது.

5.மின்வெட்டு:

பொதுமக்களுக்கும், அரசாங்கத்திற்கும், எவ்வித பாதிப்பும் இல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்துஹ் கொண்டாப்படும் முஸ்லிம்களின் பண்டிகை காலங்களில் வேண்டுமென்றே மின்வெட்டை ஏற்படுத்தி முஸ்லிம் விரோத போக்கை கடைபிடிக்கும் மின்வாரியத்தை இப்பொதுக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

6. தஞ்சை – குடந்தை சாலை:

      NH 45 C என்று பெயரளவில் உள்ள தஞ்சை-குடந்தை தேசிய நெடுஞ்சாலையில் தரம் குறைந்த சாலைகள் போடுவதால், அடிக்கடி பழுதாகிறது. மேலும் அதிகரித்து வரும் வாகனங்களாலும், குறிப்பிட்டத்தை விட அதிவேகமாக செல்லும் பிரைவேட் பேருந்துகளாலும்  அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு உயிர்பலி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனை போர்க்கால அடிப்படையில் சரி செய்து தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த மத்திய, மாநில அரசுகளை  இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

7. அடக்க மறுப்பாளர்களின் அராஜக போக்கு:

      தொடர்ந்து பண்டாரவாடை, இராஜகிரி உட்பட சில ஊர்களில் , ஏகத்துவவாதிகள் இறந்துபோகும் பொழுது அவர்களை அடக்கம் செய்ய மறுத்து வருகின்றனர். இந்த மனித்நேயம்ற செயலில் ஈடுபடும் பண்டாரவாடை முத்தவல்லிகள், நிர்வாகிகள் மற்றும் இச்சிந்தனையுள்ள விஷமிகளையும் மட்டும் இப்பொதுக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

8. சிறார்கள் நலனுக்கு:

பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர்களை அழைத்து செல்லும் சில ஆட்டோக்கள், ,மற்றும் வேன்களில் அதிக நபர்களை ஏற்றிச்செல்வது ஆபத்துக்குரியவையாகும்.  மேலும் காதுகளை கிழிக்கும் வகையில் சில ஆட்டோக்களில் பாட்டு போட்டுக்கொண்டு செல்வதை ஓட்டுனர்கள் இனி வரும் காலங்களில் இதை தவிர்த்து கொண்டு சிறார்கள் நலன் காக்கும்படி இப்பொதுக்கூட்டம் கேட்டுகொள்கிறது.
மேலும் முஸ்லிம்கள் நடத்தும் பள்ளிகூடங்களில், ஆண்டு விழாக்களில் இசை, நடனம் போன்ற அனாச்சாரங்க்களை கட்டவிழ்த்து விடுவது வாடிக்கையாகிவிட்டது. அதில் கேவலம் வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளையும் ஆட விடுவது தான், இப்போக்கை இப்பொதுக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

செய்திகள்:
மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் உரையாற்றுகையில் ஜனவரி 31,2016 இல் திருச்சியில் 'ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில்' பெருந்திரளாக மக்களை திரட்டுவது என பேசினார்.


Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !


மாவட்ட நிர்வாகிகள்



தலைவர்:

H.ஜாபர் அலி : 87547 07666


செயலாளர்:

J.முஹம்மது பாரூக் : 99658 52468


பொருளாளர்:

M.சாகுல் : 9944 33 8848


து.தலைவர்:

S.சிக்கந்தர் அலி : 93843 57357


து.செயலாளர்கள்:

சாதிக் பாட்சா 9159959911

மகாதீர் முஹம்மது : 9894 22 0097

A. அப்துல் ரஹ்மான் : 9944 33 8847

அய்யூப் கான் : 80564 62689

பரக்கதுல்லாஹ் : 95003 09529


மருத்துவரணி செயலாளர்:

வரிசை முஹம்மது : 98945 77133


மாணவரணி செயலாளர்:

நஸ்ருதீன் : 98419 34683


வர்த்தகரணி செயலாளர்:

கபீர் அஹமது : 99947 66962

பதிவுகளின் தொகுப்பு

பிரபலமானவை