

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் கிளை சார்பாக 06.04.11 புதன்கிழமை அன்று மார்க்க விளக்க மற்றும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் மனிதன் நன்றி கெட்டவனா? என்ற தலைப்பிலும், மாவட்ட பேச்சாளர் சையது சுல்தான் அவர்கள் திமுக கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியாக பாபநாசம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் M.ராம்குமார் அவர்கள் சிறிது நேரம் உரையாற்றினார், அவர் கூறுகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தவ்ஹீத் ஜமாஅத் செய்த பிரச்சாரத்தினால் தான் நான் தோல்வியை சந்திக்க நேரிட்டது. அப்பொழுது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்தது, இந்த முறை எனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று வெளிப்படையாக பேசினார்.
எல்லா புகழும் இறைவனுக்கே.
------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !