

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 03.04.11 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் மற்றும் மாணவிகள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: பெனாசிர் அவர்கள் தியாகத்தில் வளர்ந்த இஸ்லாம் என்ற தலைப்பிலும், சகோதரி: சம்சாத் பேகம் ஆலிமா அவர்கள் மறுமையில் நம் நிலை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு இரண்டாம் ஆண்டு மாணவி ஹசீனா அவர்கள் தலைமை தாங்கினார், முதலாம் ஆண்டு மாணவி சிஃபானா நஸ்ரின் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் நாற்பதுக்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !