
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 12.03.11 சனிக்கிழமை அன்று பொதுக்குழு நடைப்பெற்றது. இதில் மாவட்ட தலைவர் B.முஹம்மது இம்தியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட துணை தலைவர் சுவாமிமலை ஜாபர் மற்றும் மாவட்ட துணை செயலாளர் முஹம்மது ரியாஜ் முன்னிலை வகித்தனர். இப்பொதுக்குழுவில் நிறை, குறைகள் கேட்கப்பட்டு தாவா பனி அதிகமாக செய்வது என தீர்மானிக்கப்பட்டது. புதிய துனை செயலாளராக முஹம்மது ரஜ்வி அவர்களை ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய பள்ளிவாசல் கட்டுவதற்கு குழு அமைக்கப்பட்டு விரைவில் பள்ளி கட்டுவதற்கு வேலைகள் தொடங்குவது என தீர்மானிக்கப்பட்டது. இதில் அனைத்து கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
-----------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !