
ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 04.03.2011 வெள்ளி கிழமை மாலை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு ரியாத் TNTJ மர்கஸில் ரியாத் தஞ்சை வடக்கு மாவட்டத் துணைதலைவர் சகோ. நிஜாம் மைதீன் தலைமையில், செயலாளர் சகோ. ஹாஜா மைதீன், பொருளாளர் சகோ. சலாஹூத்தீன் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட வளர்ச்சிக்கான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.அதில் மாவட்டத்தில் பெண்களுக்கான விழிப்புணர்ச்சி நோட்டிஸ் அடித்து மாவட்டம் வாயிலாக அனைத்து கிளைகளிலும் விநியோகிப்பது. பொதுக்கூட்டம் மற்றும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் மற்றும் பெண்கள் பயான் நடத்த மாவட்டத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது. குடந்தையில் மாவட்டத்திற்கான பள்ளிவாசல் கட்ட உதவி செய்வது மேலும் மாவட்டத்தில் தவ்ஹீத் வளர்ச்சிக்கு நம்மால் ஆன உதவி செய்வது என முடிவு செய்யப்பட்டது. ரியாத் வாழ் தஞ்சை வடக்கு மாவட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
----------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !