
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சக்கராப்பள்ளி - அய்யம்பேட்டை கிளையில் 05.03.11 சனிக்கிழமை அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாநில பேச்சாளர் தாவுத் கைசர் அவர்கள் மவ்லூது இறை வணக்கமா ? என்ற தலைப்பிலும், மாவட்ட பேச்சாளர் சையது சுல்தான் அவர்கள் உலமாக்களே உங்களைதான் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட துனை தலைவர் சுவாமிமலை ஜாபர் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட துனை செயலாளர் குலாம், கிளை தலைவர் முபாரக், கிளை பொருளாளர் ரஹ்மத் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நிகழ்ச்சியின் இறுதியாக் கிளை செயலாளர் ஜாபர் நன்றியுரை நிகழ்த்தினார். இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !