தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான மேலக்காவேரி அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம், குடந்தையில் கடந்த 03.03.2011 வியாழன்று மாலை தஞ்சை வடக்கு மாவட்டம் தலைமையத்தில் நடைபெற்றது. 24.02.2011 அன்று நடைபெற்ற கல்லூரியின் பட்டமளிப்பு விழா மற்றும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி குறித்தும், அதன் கணக்குகளும் சமர்ப்பிக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு பெரும்பான்மையான பொருளாதார ஒத்துழைப்பு தந்த ரியாத் அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கல்லூரி வளர்ச்சிக்கான பல்வேறு செயல்திட்டங்கள் தீட்டப்பட்டன.
இந்த அமர்வில் கல்லூரி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ரியாத் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கினர்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
---------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !