

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமாக அந்நூர்  இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியில், மாணவிகளின் பேச்சுத் திறனை வளர்க்கும்  முகமாக பல்வேறு சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதன்  வரிசையில், தீனியாத், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவிகளின், -   மக்களிடையே தூய குர்ஆன் - ஹதீஸ் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்து வைக்க  ஏதுவாக, பேச்சுப் பயிற்சி மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டன.
     ரியாத் TNTJ மண்டல செயலாளரும், அந்நூர் தவ்ஹீத்  சகோதரர்கள் கூட்டமைப்பு ரியாதின் தலைவருமான சகோ. ஃபெய்ஸல் அவர்கள்  19.02.2011 சனியன்று மதியம் நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தினார்கள்.
  மாணவிகள் "காற்றில் பறந்த கற்பு நெறி", "அல்லாஹ்வின்  கயிற்றை பிடிப்போம்", "வெட்கத்தை கைவிட வேண்டாம்", "இரகசியம் பேணுவோம்",  "வாக்குறுதியை மீறுதல்" மற்றும் பல தலைப்புகளில் உரையாற்றினர்.
   எவ்வாறு பேச்சினூடாக வாதங்களை எடுத்து வைக்க வேண்டும்;  கேட்கும் மக்கள் சோர்வடையாமல் எவ்வாறு அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில்  பேச வேண்டும்; குர்ஆனில் அறிவியல் ஆதாரங்களை எவ்வாறு எடுத்துரைக்க வேண்டும்  முதலான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
    அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி செயலாளர் சகோ. ஜாஃபர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !