
 
தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான மேலக்காவேரி அந்நூர்  இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியில் சிறப்பு மருத்துவ விழிப்புணர்வு முகாம்  நடத்தப்பட்டது. மாணவிகளின் உடல்நலம் - மனநல தகுதியை மேம்படுத்த ஆலோசனைகள்  வழங்கவும், பெண்கள் சம்பந்தமான உடல்ரீதியான பிரச்சனைகள் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உணவு (DIET) ஆலோசனைகள் வழங்கவும்  இந்நிகழ்ச்சி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சகோ. இம்தியாஸ் அவர்கள் மூலம்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த 19.02.2011 சனிக்கிழமை மஃக்ரிப் தொழுகைக்குப்  பின் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கும்பகோணத்தில்  மிகவும் பிரபலமாக உள்ள பெண்கள்-மகப்பேறு சிறப்பு மருத்துவர் DR மஞ்சுளா  அவர்கள் பங்கேற்றார்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில், ரியாத் மண்டல செயலாளரும்,  அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு ரியாத் தலைவருமான சகோ. ஃபெய்ஸல்  அவர்கள் "இதுதான் இஸ்லாம்" என்ற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தி நிகழ்ச்சியை  துவங்கி வைத்தார்.
அதனை அடுத்து என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்; எவற்றை  தவிர்க்க வேண்டும், உடற்பயிற்சி செய்தல், டயட் கண்ட்ரோல் என்றால் என்ன  போன்ற விஷயங்களை தனக்கே உரிய பாணியில் Dr. மஞ்சுளா அவர்கள் எளிய தமிழில்  அழகாக விளக்கினார். 
பெண்கள் மட்டும் பங்கு பெற்ற மருத்துவ சம்பந்தமான  கேள்வி/பதில் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. மேலும், எதிர்காலங்களில்  அந்நூர் கல்லூரி மாணவிகளுக்காக மருத்துவ முகாமையும் செய்து தருவதாக  வாக்களித்துள்ளார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகளை Dr. மஞ்சுளா  வியந்து பாராட்டினார். மேலும், நிகழ்ச்சியில் அமைதி காத்து ஆர்வத்துடன்  நிகழ்ச்சியை நடத்த உதவியாக இருந்த மாணவிகளியும் Dr. மன்சுளா பாராட்டினார். 
நிகழ்ச்சியின் இறுதியில், Dr. மஞ்சுளா அவர்களுக்கும், உதவி  மருத்துவர் Dr. செல்வி அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. அந்நூர்  கல்லூரி தலைவர் சகோ. ஷாஜகான் அவர்களும், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சகோ.  இம்தியாஸ் அவர்களும், கல்லூரி சார்பாக நினைவுப் பரிசும், திருக்குர்ஆன்  ஆங்கில - தமிழ் மொழியாக்கங்களையும் வழங்கினர். அந்நூர் கல்லூரி துணைச்  செயலாளர் சகோ. சாகுல் உடனிருந்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அந்நூர் கல்லூரி செயலாளர் சகோ. சுவாமிமலை ஜாஃபர் சிறப்பாக செய்திருந்தார்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !