









தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணம் மீன் மார்கெட் அருகில் 04.10.10 திங்கட்கிழமை காலை 11 மணிக்கு நக்கீரன் வார இதழை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட தலைவர் B.முஹம்மது இம்தியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார், மாநில பேச்சாளர் தாவுத் கைசர் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் I.முஹம்மது ராஜிக், மாவட்ட பொருளாளர் T.ஹாஜா மைதீன், மாவட்ட துணை தலைவர் சுவாமிமலை ஜாபர், மாவட்ட தொண்டரணி செயலாளர் R.ஹிதாயத்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதியாக குடந்தை கிளை செயலாளர் M.சாகுல் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இதில் ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !