வெளிநாட்டிற்கான PCC-Police Clearance Certificate பெறுவது எப்படி? - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » வெளிநாட்டிற்கான PCC-Police Clearance Certificate பெறுவது எப்படி?

வெளிநாட்டிற்கான PCC-Police Clearance Certificate பெறுவது எப்படி?

முன்னூறு ரூபாய் மட்டுமே செலுத்தி ஒருவர் பெறக்கூடிய பாஸ்போட்டிற்கான PCC-Police Clearance Certificate பலர் ஆயிரத்திற்கும் அதிகம் செலுத்தி தரகர்கள் மூலம் பெறுவதும் சில நேரம் (குறிப்பாக சரியான தகவல் அறியாதவர்கள்) ஏமாந்து போவதும் வாடிக்கையாகி வருகிறது.


இருமுறை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு PCC விஷயமாக சென்றதில் நான் அறிந்தவற்றை இணையத்தில் பகிர்ந்து கொண்டால் பலருக்கு உபயோகமாக இருக்கும் என்பதால் தான் இந்த பதிவு.


Police Clearance Certificate க்குரிய படிவத்தை(form) ஐ பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். http://passport.gov.in/cpv/miscell.pdf

3.5 x 3.5 செ.மீ அளவு புகைப்படம் ஒட்டி, நிரப்பப்பட்ட அந்த படிவத்துடன் அசல் பாஸ்போர்ட்டும் அதன் நகலும், இருப்பிட சான்றும்,(உதாரணத்திற்கு Ration Card நகல்), சமர்ப்பிக்க வேண்டும்.


காவல் நிலையங்களிலிருந்து எந்த விதமான சான்றிதழ்களும் வாங்கத் தேவையில்லை (உங்களுக்கு எதிராக எந்த வழக்கும் இல்லையென்றால் மட்டும்)


விண்ணப்பிக்கும் நபர் கடந்த ஒரு வருடமாக தற்போது இருக்கும் முகவரியில் இல்லையெனில் அதற்கு என்று தனியாக படிவம் ஒன்று சமர்ப்பிக்க வேண்டும். அந்த படிவத்தை பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம் https://passport.gov.in/pms/PPForm.படப்


காலை 9.30 முதல் 12 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். காலை 8.45 க்கு எல்லாம் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருக்குமாறு சென்றால் எளிமையாக இருக்கும்.

கட்டணமாக 300 ரூபாய் மட்டும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கட்டினால் போதும். கட்டண விவரம் கீழே உள்ள சுட்டியில் இருக்கிறது.


http://passport.gov.in/cpv/FeeStructure.htm

காலையில் விண்ணப்பித்தால் மாலை 5 மணிக்கு எல்லாம் PCC கிடைத்து விடும்.


PCC குறித்த முழு விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதளத்தில் உள்ளது https://passport.gov.in/pms/Police%20Clearance%20Certificate.ஹதம்


விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரர் தான் நேரில் செல்ல வேண்டுமென்பதுமில்லை,விண்ணப்பிப்பவர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வர இயலாத காரணத்தை குறிப்பிட்டு அவர் கையெழுத்துடன் கூடிய ஒரு கடிதத்தை யாரேனும் கொண்டுசென்றாலும் போதுமானது.


மதுரை பாஸ்போர்ட் அலுவலக முகவரி.

Passport Office, Bharathi Ula Veethi, Race Course Road, Madurai-625 002.
website: http://passport.gov.in/madurai.html

மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க முடியும்.


திருச்சி பாஸ்போர்ட் அலுவலக முகவரி


Passport Office, Water Tank Building, W.B. Road , Tiruchirappalli. Pin Code 620 008, Fax: 0431-2707515 E-mail: rpo.trichy@mea.gov.இன்


திருச்சி, கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.


கோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலக முகவரி


Passport Office, First Floor, Corporation Commercial Complex, Opp. Thandumariamman Koil, Avinashi Road, Coimbatore - 641018

Phone: 0422-2304888,2309009, Fax: 0422-2306660, E-mail: rpo.cbe@mea.gov.in, Tele-enquiry: 0422-2309009, 2304888, Web-site: http://passport.gov.in/coimbatore.ஹ்த்ம்ல்


கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.


சென்னை பாஸ்போர்ட் அலுவலக முகவரி

Regional Passport Office,IInd Floor, Shastri Bhavan, 26, Haddows Road, Chennai - 600 006

Phones : 91-44-28203591, 28203593, 28203594, 28240696

Fax : 91-44-28252767

E-mail : rpo.chennai@mea.gov.இன்


சென்னை, கடலூர், தர்மபுரி, காஞ்சிபுரம், காரைக்கால், கிருஷ்ணகிரி, பாண்டிச்சேரி, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் வேலுர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

நன்றி:

தவ்ஹீத் ஜமாஅத்
துபை.
__________________________________________________
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !


மாவட்ட நிர்வாகிகள்



தலைவர்:

H.ஜாபர் அலி : 87547 07666


செயலாளர்:

J.முஹம்மது பாரூக் : 99658 52468


பொருளாளர்:

M.சாகுல் : 9944 33 8848


து.தலைவர்:

S.சிக்கந்தர் அலி : 93843 57357


து.செயலாளர்கள்:

சாதிக் பாட்சா 9159959911

மகாதீர் முஹம்மது : 9894 22 0097

A. அப்துல் ரஹ்மான் : 9944 33 8847

அய்யூப் கான் : 80564 62689

பரக்கதுல்லாஹ் : 95003 09529


மருத்துவரணி செயலாளர்:

வரிசை முஹம்மது : 98945 77133


மாணவரணி செயலாளர்:

நஸ்ருதீன் : 98419 34683


வர்த்தகரணி செயலாளர்:

கபீர் அஹமது : 99947 66962

பதிவுகளின் தொகுப்பு

பிரபலமானவை