தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டத்தின் மாவட்ட நிர்வாகக்குழு 03.03.10 புதன்கிழமை மாலை 4 மணியளவில் மாவட்ட தலைவர் A.S.அலாவுதீன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக tntjtv.net குழுவில் உள்ள சகோதரர்களை அழைத்து மேற்கண்ட இணையதள விஷயமாக நிறை, குறைகள் கேட்டறியப்பட்டது. இன்ஷா அலலாஹ் புதிய பொலிவுடன் தாவா நிகழ்ச்சிகள், மக்களுக்கு தேவையான அரசு துறை செய்திகள், கல்விச் செய்திகள், வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் சமுதாயாச் செய்திகளை இடம் பெறச் செய்வதென முடிவெடுக்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் tntjtv.net குழுவில் உள்ள சகோ:வலங்கைமான் ரியாஜ் மற்றும் மேலக்காவேரி கலீல் கலந்துக் கொண்டனர், மேலும் மேற்கண்ட குழுவில் இடம் பெற்றுள்ள ரியாத் பைசல் அவர்கள் தொலைபேசி மூலமாக தமது ஆலோசனைகளை பதிவு செய்தார். இத்துடன் முதல் அமர்வு நிறைவுற்றது. இரண்டாவது அமர்வில் மாவட்ட நிர்வாகிகள் மட்டும் பங்கேற்ற நிர்வாகக்குழு நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் A.S.அலாவுதீன், மா.செயலாளர் H.சர்புதீன், மா.பொருளாளர் Z.முஹம்மது நுஃமான், மா.து.செயலாளர்கள் ஷாஜஹான், சாகுல், குலாம், அக்பர் அலி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
__________________________________________________
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !