- எல்லா அமைப்புகளை விட தமிழகத்தில் TNTJ அதிக அளவு இரத்த தானம்
- TNTJ விற்கு இரத்த தான சேவையில் முதலிடத்திற்கான விருது! மைலாப்பூரில் நடைபெற்ற விருது வழங்கும் விழா! TNTJ இரத்த தான சேவையை பாராட்டி மேலும் 40 விருதுகள்! அல்ஹம்துலில்லாஹ்!

தமிழகத்தில் இரத்ததான சேவையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மீண்டும் முதலிடதை பிடித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ் தண்ணார்வ இரத்த தான குழுமம் (AVBD) மற்றும் சென்னை தண்ணார்வ இரத்த தான வங்கி (MVBB) இதை தெரிவித்தது. இதற்கான விருது வழங்கும் விழா நேற்று (7-3-2008) மைலாப்பூர் MCTM Auditorium த்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் TNTJ விற்கு முதலிடத்திற்கான விருது வழங்கப்பட்டது . இதை TNTJ மாநில நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். மேலும் அதிக அளவு இரத்த தானம செய்ததற்காக TNTJ மாவட்டங்களுக்கும் கிளைகளுக்கும் மொத்தம் 40 விருதுகள் வழங்கப்பட்டது. மாவட்ட, கிளை களுக்கான விருதுகளை அந்தந்த மாவட்ட, கிளை நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !