அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
- தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள்!
- குழந்தைகளுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்!
- தடையை மீறி ஆர்பாட்டம்!
- பெண்கள் உள்பட பல ஆயிரம் பேர் கைது!
தஞ்சை மாவட்டம் ஆவணியாபுரம் முருகேசன் என்பவர் சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சிறிதும் சம்பந்தப்படாத அப்பாவி முஸ்லிம்கள் சாதிக் மற்றம் இமாம் அலி ஆகியோர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 1 மாத காலமாக சிறையில் வாடி வருகின்றார்கள். எந்த தவறும் செய்யாத அப்பாவி முஸ்லிம்களான சாதிக் மற்றும் இமாம் அலி இருவர் மீதும் உள்னோக்கத்துடன் திருவிடைமருதூர் காவல்துறை ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் D.S.P ரொசாரியோ ஆகிய இருவரும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இருவரும் அப்பாவிகள் இவர்கள் மீது பொய்வழக்கு தான் போடப்பட்டுள்ளது என்று உயர் அதிகாரிகளுக்கு நன்கு தெரிந்திருந்தும் D.S.P ரொசாரியோ, ஆய்வாளர் பழனிச்சாமி ஆகிய இருவர் மீதும் எந்த நடவடிககையும் எடுக்கப்படவில்லை. பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
ஆர்பாட்ட செய்தி அனைத்து பத்திரிக்கையிலும் இடம் பிடித்திருந்தது.






0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !