தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான கும்பகோணம் அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கான முதன்மை அமைப்பான, அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு – சவூதி அரேபியாவின் மாதாந்திரக் கூட்டம் 12.9.2014 வெள்ளி அன்று மாலை 6.30 மணிக்கு, ரியாத் TNTJ மர்கஸில், அதன் தலைவர் சகோ. கதிரை ஹாஜா மைதீன் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரி வளர்ச்சிக்கான செயல்திட்டங்களையும், கடந்த மாத செயல்பாடுகளையும் சகோ. கதிரை ஹாஜா மைதீன் விளக்கினார். கணக்கு விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கூட்டம் தொடர்ச்சியாக நடைபெறுவதுகுறிப்பிடத்தக்கது.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள்
தலைவர் - ஜ.முஹம்மது ரியாதுல் பரீத், எலந்தங்குடி
து.தலைவர் - K.நிஜாம் மைதீன், மேலக்காவேரி
செயலாளர் - சலாஹுதீன், திருமங்கலக்குடி
பொருளாளர் - கதிரை. ஹாஜா, ஆவணியாபுரம்
து.செயலாளர் - நூர் முஹம்மது, திருவிடைமருதூர்
து.செயலாளர் - சாகுல் ஹமீது, K.R.பட்டினம்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !