ரியாதில் அந்நூர் கல்லூரிக்கான ஜூலை 2011 மாத கூட்டம். - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » ரியாதில் அந்நூர் கல்லூரிக்கான ஜூலை 2011 மாத கூட்டம்.

ரியாதில் அந்நூர் கல்லூரிக்கான ஜூலை 2011 மாத கூட்டம்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான கும்பகோணம் அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கான முதன்மை அமைப்பான, அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு – சவூதி அரேபியாவின் பொதுக்குழுக் கூட்டம் 08.07.2011 வெள்ளி அன்று, மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, ரியாத் TNTJ மர்கஸில், கூட்டமைப்பு தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமையில் நடைபெற்றது. அமைப்பின் செயலாளர் சகோ. ஹாஜா மைதீன் செயல்பாடுகளை விளக்கினார்.

தஞ்சை மாவட்டம் முழுவதும் பல்வேறு கிளைகளில், கல்லூரி ஆலிமாக்கள் பயான் நிகழ்ச்சிகள் & தர்பியாக்களில் பங்கேற்ற தகவல்கள் பதியப்பட்டன. கல்லூரியில் நடைபெறும் பேச்சுப் பயிற்சி குறித்த தகவல் பதியப்பட்டது. கல்லூரி வளர்ச்சிக்கான ஆலோனைகள் கலந்தாலோசிக்கப்பட்டன. பொருளாளர் சகோ. ஃபரீத் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை விவரித்தார்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கூட்டம் தொடர்ச்சியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !