


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் நாச்சியார்கோயில் - திருநறையூர் கிளையில் 25.06.10 வெள்ளிகிழமை அன்று மாபெரும் ஜூலை 4 விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாநில துனை தலைவர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஜூலை 4 மாநாடு ஏன்? எதற்கு? என்ற தலைப்பிலும், மாவட்ட பேச்சாளர் சையது சுல்தான் அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு ரியாத் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் பேட்டை அமீர்தீன் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் B.முஹம்மது இம்தியாஸ், மாவட்ட செயலாளர் I.முஹம்மது ராஜிக், மாவட்ட துணை தலைவர் சுவாமிமலை ஜாபர், மாவட்ட துணை செயலாளர் M.முஹம்மது ரியாஜ், B.ஜமால் முஹம்மது கிளை தலைவர், M.ஹிதாயத்துல்லாஹ் கிளை துணை தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக கிளை செயலாளர் பேட்டை காலித் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:- நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின்படி முஸ்லிம்களுக்கு மத்தியில் 10% சதவிகிதம் இட ஒதுக்கீடு உடனே வழங்க வேண்டும் என காங்கிரஸ் அரசை இப்பொதுகூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்ளபடுகிறது.
- இன்ஷா அல்லாஹ் ஜூலை 4 அன்று சென்னை தீவுத்திடலில் முஸ்லிம் சமுதாயத்திற்கு மத்தியில் 10% சதவிகிதம் இடஒதுக்கீடு கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜஅமாத் சார்பாக ஏற்பாடு செய்து இருக்கின்ற மாபெரும் பேரணி & மாநாட்டிற்கு நாச்சியார்கோயில் - திருனரயூரில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் திரளாக பங்கு பெற வேண்டும் என இப்பொது கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !