அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கோவிந்தக்குடியில் பெண்கள் பயான்


23.02.08 சனிக்கிழமை மாலை கோவிந்தக்குடி TNTJ கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி மைசா (மூன்றாம் ஆண்டு மாணவி – அன்நூர் இஸ்லாமிய கல்லூரி)அவர்கள் “இஸ்லாத்தில் பிறப்பும் இறப்பும்” என்ற தலைப்பிலும், சகோதரி கதிஜா (ஆலிமா – அன்நூர் இஸ்லாமிய கல்லூரி) அவர்கள் “நாவடக்கம” என்ற தலைப்பிலும், சிறப்புரை ஆற்றினார்கள். இதில் 50 –க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை TNTJ கோவிந்தக்குடி கிளை சகோதரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
____________________________________________
மேலக்காவேரியில் பெண்கள் பாயான்
மேலக்காவேரியில் பெண்கள் பாயான்
மேலக்காவேரியில் அமைந்துள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறும் நிகழ்ச்சியை தவறு என்று மக்களுக்கு உணர்திடும் வகையில் மேலக்காவேரி முக்கிய வீடுகளில் பெண்கள் பயான் நான்கு தினங்கள் நடைபெற்றது. இந்த பெண்கள் பயானில் “இணைவைத்தல்” என்ற தலைப்பிலும் “தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பிலும் ‘அன்நூர் இஸ்லாமிய கல்லூரி’ ஆலிமாக்கள், மாணவிகள் சென்று பிரச்சாரம் செய்து வந்தார்கள், இந்த தொடர் பெண்கள் நிகழ்ச்சி மேலக்காவேரி கிளையின் சிறந்த வழி காட்டுதலாகவும் புதிய முயற்சியாகவும் இருந்தது குறிப்பிடதக்கது. இந்த நிகழ்ச்சி பிப்ரவரி மாதம் 21, 22, 23 ஆகிய தேதியளில் நடைபெற்றது.
_____________________________________________
திருலோக்கியில் பெண்கள் பாயான்
22-02-08 வெள்ளிக்கிழமை திருலோக்கியில் பெண்கள் பயான் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் சகோதரி: நஃபிஷாத் (மூன்றாம் ஆண்டு மாணவி – அன்நூர் இஸ்லாமிய கல்லூரி) அவர்கள் “தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பிலும், சகோதரி: சம்சாத் (ஆலிமா – அன்நூர் இஸ்லாமிய கல்லூரி) அவர்கள் “ஓர் இறைக்கொள்கை” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் சுமார் 40 –க்கும் மேற்பட்ட பெண்களும், 20-க்கும் மேற்பட்ட ஆண்களும் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்சியை திருப்பனந்தாள் TNTJ நிர்வாகிகள் மற்றும் திருலோக்கி சகோதரர்கள் இணைந்து செய்திருந்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !