- முருக்கங்குடியில் மாபெரும் இரத்த தான முகாம்.
- 50-க்கும் மேற்பட்டோர் குறிதிக் கொடை அளத்தனர்.
- புகைப்படங்களுடன் செய்தி...

தஞ்சை மாவட்டம் (வடக்கு)
முருக்கங்குடி கிளை சார்பாக மாபெரும்
ரத்ததானமுகாம் 8-12-2007 சனிக்கிழமை காலை 10:30 மணி அளவில் AH.தல்ஹர் இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு TNTJ தஞ்சை மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் N.சாகுல் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட பொருளாலர் A.ஹாஜாமைதீன், முருக்கங்குடி கிளை தலைவர் SMI.இத்ரீஸ், கிளை மருத்துவர் அணி செயலாளர் NPA.முஹம்மது யாசீர், கிளை பொருளாலர் G.சபீமுஹம்மது மற்றும் கிளை துணைதலைவர் மௌபர் அலி அவர்கள் முதன்மை வகித்தனர். Dr. முஹம்மது அலி M.D.DCH., மற்றும் மானில செயலாளர் H.சர்புதீன் அவர்கள் ரத்ததான விளக்கவுரை ஆற்றினார்கள். இருதியாக கிளை செயலாளர் AH.தல்கர் அலி அவர்கள் நன்றிவுரை ஆற்றினார்கள்.

குறிப்பு: இதில் 52 பேர் இரத்ததானம் செய்தனர், இந்த கிளை துடங்கி இரண்டு மாதங்களே ஆகின்றது என்பதும், இந்த சிறு கிராமத்தில் அதிகமானோர் இரத்ததானம் செய்ததும் குறிப்பிடதக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !