தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை நகரத்தில் 14.04.13 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணியளவில் குடந்தை மார்னிங் ஸ்டார் ஸ்கூல் அருகில் மாபெரும் மார்க்க விளக்க கூட்டம் நடைப்பெற்றது.
இதில் மாநில தலைவர் P.J அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான உலகளாவிய சதி என்ற தலைப்பிலும் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் மதங்களை கடந்த மனித நேயம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் B.முஹம்மது இம்தியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், நிகழ்ச்சியின் இறுதியாக நகர தலைவர் அப்துல் மாலிக் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்.
--------------------------------------------------------------------------------------------------------------







0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !