
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கோணுலாம்பள்ளம் கிளையில் 12.07.12 வியாழக்கிழமை அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் மாநபி வழியா? மத்ஹப் வழியா என்ற தலைப்பிலும், மாவட்ட பேச்சாளர் சாதிக் அவர்கள் சமுதாய சீரழிவு என்ற தலைப்பிலும், சகோதரி:சபுர் நிசா ஆலிமா அவர்கள் சீரழிக்கும் சீரியல்கள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் வரிசை முஹம்மது அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக கிளை தலைவர் முபாரக் அலி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்.
--------------------------------------------------------------------------------------------------------------







0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !